ரிஷிவந்தியம் தொகுதி எம் எல் ஏ மாவட்ட ஆட்சியரிடம் மனு




















 




 


 










 






 





      திருக்கோவிலூர் அடுத்த ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு கிரண் குராலா அவர்களை சந்தித்து ரிஷிவந்தியத்தை தனி தலுக்காவாக அறிவிக்க வேண்டும். சட்டமன்றத்தில் 2013-14 ஆண்டில் அன்றைய முதல்வரால் -110 ம் விதியின் கீழ் அறிவித்தபடி முகையூர் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து மணலூர்பேட்டையை தனி ஒன்றியமாக வரையறுக்க வேண்டும். 

           மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றின் கரையில் பூங்கா அமைத்தல், PMAY திட்டத் பயனாளர் பட்டியலில் இடம் பெறாதவர்களின் வீடுகள் விபத்து மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை தருவது, வனத்துறை அனுமதி தாமதப்படுத்துவதால் சாலை  விரிவாக்கப் பணிகள் தடைபடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டார்.