கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் 56 வது பிறந்த நாள் விழா மற்றும் தேர்தல் ஆணையத்தில்அமமுக கட்சி பதிவு செய்யப்பட்டதன் விழா ஆகிய விழாக்கள் கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் கோமுகிமணியன் தலைமையில், ஒன்றிய செயலாளர்கள் கள்ளக்குறிச்சி மதுசூதனன், சின்னசேலம் ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி நகர நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், பால்ராஜ், தனலட்சுமி, செல்வி, மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், கிராம பகுதி செயலாளர்கள் ஏராளமானோர் ஒன்றுகூடி, கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி அருகே உள்ள இந்திலி அருள் முருகன் கோவிலில் அன்னதான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.