அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு


அடுத்த 24 மணி நேரத்தில், கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 


இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இலங்கைக்கு தென்கிழக்கே, தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


உள் தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வானிமை மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு மழை பதிவாகவில்லை என்றும், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும், வானிலை மையம் தெரிவித்துள்ளது.