மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவால், வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது.
50 கிலோ எடை கொண்ட சின்னவெங்காயம் ஒரு மூட்டை எட்டாயிரத்து 500 ரூபாய்க்கும், 50 கிலோ எடை கொண்ட பெரிய வெங்காய மூட்டை பத்தாயிரம் ரூபாய்க்கும் கொள்முதல் செய்வதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் வாங்கிய அதே விலைக்கு சின்ன வெங்காயம் கிலோ 160 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்தாலும், பொதுமக்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.